Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » விண்வெளியில் பூப்பந்து விளையாடிய வீரர்கள்

விண்வெளியில் பூப்பந்து விளையாடிய வீரர்கள்

பன்னாட்டு வாணியல் ஆய்வுத்தளத்தில் பூப்பந்து விளையாடும் விண்வெளி வீரர்களின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

👤 Saravana Rajendran7 Feb 2018 3:44 PM GMT
விண்வெளியில் பூப்பந்து விளையாடிய வீரர்கள்
Share Post

எவ்வித ஈர்ப்பு விசையும் இல்லாத வாணவெளியில் அன்றாட செயல்களைச் செய்வதே மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனால் பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையமான அய்.எஸ்.எஸ்-ல் உள்ள விண்வெளி வீரர்கள் பூப்பந்து விளையாடியுள்ளனர்.
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து பறந்துகொண்டே விளையாடும் காணொளி அனைவரையும் வியப்பில் மூழ்கடித்தது.
தங்களுடைய அனுபவம் குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர், 'ஈர்ப்பு விசையில்லாத இடத்தில் விளையாடி இருப்பது செவ்வாய் கோளுக்குச் சென்று கொடியை நாட்டி வருவதற்குச் சமம்' என்று கூறியுள்ளார்.. மேலும் இப்படி விளையாடுவது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவையும் ஏற்படுத்துகிறது என்று விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர்.