Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » தடம் மாறி விண்கற்களை நோக்கிச்செல்லும் கார்

தடம் மாறி விண்கற்களை நோக்கிச்செல்லும் கார்

உலகின் மிகபெரிய ராக்கெட் புதனன்று புளோரிடாவில் இருந்து பறக்கவிடப்பட்டது, பால்கன் ஹெவி என்ற ராக்கெட்டின் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் ஏலன் மாஸ்கின் பிரியமான சிவப்பு நிற காரையும் சேர்த்து அனுப்பியிருந்தார். இந்த விபரம் கார் விண்வெளியில் சென்று சேர்ந்த பிறகுதான் அவராகவே இந்த விபரத்தைப் படத்துடன் வெளியிட்டார்.

👤 Saravana Rajendran9 Feb 2018 10:06 AM GMT
தடம் மாறி விண்கற்களை நோக்கிச்செல்லும் கார்
Share Post

இந்தக் கார் 6 மாதம் கழித்து செவ்வாய் கோளை அடையும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் அவ்வாறு அடைவதற்கு எவ்வகையான தொழில் நுட்பம் உள்ளது என்று எந்த ஒரு திட்டமுன்வடிவையும் கூறவில்லை, இந்த நிலையில் செவ்வாய் பயணித்துக்கொண்டிருந்த அந்த கார் திடீரென்று செவ்வாய்க்குச் செல்லும் பாதையை விட்டு விலகியது. இதனால் அந்தக் கார் செவ்வாய்க்கு அப்பால் உள்ள விண்கற்கள் அடர்த்தியாக சுற்றிக்கொண்டு இருக்கும் பாதையை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்த தகவலை எலென் மஸ்க், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் இதற்கு காரணமாக அதன் அதீத உந்துவிசை என்று கூறப்படுகிறது, எந்த ஒரு எரிபொருளும் இல்லாத ஒரு பொருள் எவ்வாறு அதீத உந்துசக்திகொண்டு தடம் மாறும் என்பது புதிராக உள்ளது.