Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » அரியவகை மீன் இனம் கண்டுபிடிப்பு

அரியவகை மீன் இனம் கண்டுபிடிப்பு

அஸ்திரேலியாவின் தெற்கே ஆழமான குளிர்கடல் பகுதியில் புதியவகை மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அறிவியல் ஆய்வு மய்யம் கூறியுள்ளது.

👤 Saravana Rajendran22 Feb 2018 4:23 PM GMT
அரியவகை மீன் இனம் கண்டுபிடிப்பு
Share Post

மனிதன் இப்பெருவெளியின் ஆரம்பகால ஒளிச்சிதறல்களைக் கூட கண்டுபிடித்து விட்டான். ஆனால் நாம் வாழும் இந்த புவிக்கொள்ளத்தில் 4:3 பங்காக இருக்கும் பெருங்கடலில் 2 விழுக்காடு மர்மங்களை மட்டுமே கண்டுடிபிடித்துள்ளான்.


இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் தெற்கே அட்லாண்டிக் குளிர் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலிய சூழியல் ஆய்வாளர்கள் அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட அரியவகை மீன் இனங்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்கள் ஒரு மாத காலம் கப்பலில் தங்கினர். அவர்கள் கடல் மட்டத்திற்கு 4.8 கிலோமீட்டர் கீழே உள்ள உயிரினங்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம் 42,000க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் சிக்கின.