Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » சூரியனைக் கைகளால் மறைக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

சூரியனைக் கைகளால் மறைக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

புவிவெப்பமயமாதலை தடைசெய்ய சூரியஒளிகுறைக்கும் ஆய்வில் மேற்கத்திய ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.

👤 Saravana Rajendran4 April 2018 5:31 PM GMT
சூரியனைக் கைகளால் மறைக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
Share Post

உலகின் நவீன தொழில் நுட்பவளர்ச்சி மனித குலத்திற்கு பயன்படுவதாக இருந்தாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது, இதனால் வளிமண்டலத்தில் கரியமில வாயுக்கள், மற்றும் கார்பன் மூலக்கூறுகளைத் அதிகமாகக் தாங்கிக்கொண்டு இருக்கும் வாயுக்களால் சூரியவெப்பம் பூமிக்கு வந்த பிறகு வெளியேறாமல் இங்கேயே தங்கி புவியை சூடாக்கி வருகிறது,
இதனால் பருவநிலை மாற்றம் கடுமையான இயற்கைசேதங்கள், போன்றவை நிகழ்கிறது, இதனால் மனிதர்களுடன் விலங்குகள் தாவரங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். http://tamil.voiceforjustice.ca/
நவீன யுகத்தில் நவீனப்பொருட்கள் மனிதர்களின் அன்றாடத்தேவையாகிவிட்டது, அப்போருட்கள் இல்லாத வாழ்க்கை என்பது இயலாத சூழ்நிலை வந்துவிட்டது, நவீனப்பொருட்களை பயன்படுத்த இயலாமல் போகும் போது மனிதர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கின்றனர்.
ஆகவே புவிக்கு வரும் சூரியனின் வெப்பத்தை குறைப்பது எப்படி என்ற ஆய்வில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
ஆங்கில அறிவியல் படங்களில் வருவது போல் பெரிய கண்ணாடி ஓடுகளை ஒரு நகரம் முழுவதும் மூடும் வேலை இல்லை, இது புவிக்கு வெளியே செயற்கைக்கொள்களில் உதவியால் பூமிக்கு வரும் சூரிய ஒளியில் பெரும்பாலான ஒளியை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பிவிட்டு பூமியில் முன்பு உள்ளதைப்போல் மிதமான ஒளியை மட்டுமே வருமாறு செய்ய முடியுமா என்று ஆய்வு செய்துவருகின்றனர். http://tamil.voiceforjustice.ca/
ஏற்கனவே இது குறித்து ரஷ்ய ஆய்வாளர்கள் பிரமாண்ட மான தகடுகளை அமைத்து அதில் மின்சாரமும் தயாரித்துக்கொண்டு சூரிய ஒளி அதிக அளவு பூமியை வந்தடைவதையும் தடுக்க முடியும் என்று கூறியிருந்தனர். ரஷ்ய ஆய்வாளர்களின் இந்த ஆய்வறிக்கைகை மையமாக வைத்து அய்ரோப்பிய வான் இயற்பியல் ஆய்வாளர்கள் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
உலக வெப்பமயமாதலால் அய்ரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுவருகிறது, பிரிட்டனில் வரலாறு காணாத பனிப்பொழிவு, நார்வேயின் ஆர்டிக் மண்டலப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்தல் போன்றவைகளால் அய்ரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அந்த நாடுகள் இதில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன.
இனி யாராவது சூரியனை கைகளால் மறைக்க முடியுமா என்று கேட்டால் துணிச்சலுடன் "மறைத்துவிடலாம் சிறிது கால அவகாசம் வேண்டுமென்று" கூறலாம்,