Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » குழாய் நீரில் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகளை அகற்ற என்ன செய்யலாம்

குழாய் நீரில் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகளை அகற்ற என்ன செய்யலாம்

குழாயிலிருந்து தண்ணீரை நேரடியாக அருந்துவதுபற்றி நம்மில் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் ஆனால் நீண்டகாலம் பயன்படுத்தப்படாத குழாயிலுள்ள தண்ணீரில் நுண்ணுயிர்க் கிருமிகள் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

👤 Saravana Rajendran20 April 2018 2:51 PM GMT
குழாய் நீரில் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகளை அகற்ற என்ன செய்யலாம்
Share Post

ஒருவகை குளிர் சுரத்துடன் கூடிய சளிக்காய்ச்சலை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்க் கிருமிகள் நீண்ட நாள் பயன்படுத்தாமல் இருக்கும் குழாய்களின் உட்புறத்தில் உள்ளன.
ஒரு சில நாட்கள் பயன்படுத்தாத குழாய்களிலும் நுண்ணுயிரிகளும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் சேர்கின்றன. இதனால் தண்ணீரில் நுண்ணுயிர்க் கிருமிகள் அதிகரிக்கிறது. ஆனால் பதற்றம் வேண்டாம்.
குழாயிலிருந்து வெளிவரும் முதல் 100 மில்லிலிட்டர் தண்ணீரில்தான் இத்தகைய கிருமிகள் அதிகம் காணப்படும். அகவே சிறிது நீரை வெளியேற்றிவிட்டு பிறகு நாம் தொடர்ந்து குழாய்நீரைப் பயன்படுத்தவேண்டும். அதனால் சிறிது நாட்கள் ஊருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் குழாய்த் தண்ணீரை உடனே அருந்தாதீர்கள்! குழாயைத்திறந்த உடன் வெளிவரும் நீரை வாளியில் பிடித்து செடிகளுக்கு ஊற்றிவிட்டு பிறகு வரும் நீரைப் குடிக்கப் பயன்படுத்துங்கள்.