Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » ஆட்டோ எக்ஸ்போ 2018 மாருதி ஸ்விப்ட் புதிய மாடல் விற்பனைக்கு வந்தது

ஆட்டோ எக்ஸ்போ 2018 மாருதி ஸ்விப்ட் புதிய மாடல் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முன்னணி கார்களில் ஒன்றான மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் 2018 புதிய மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படை குறைந்தபட்ச விலை ரூ. 4.99 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran8 Feb 2018 5:42 PM GMT
ஆட்டோ எக்ஸ்போ 2018   மாருதி ஸ்விப்ட் புதிய மாடல் விற்பனைக்கு வந்தது
Share Post

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. புதிய ஸ்விப்ட் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2018, வாகன கண்காட்சியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

மூன்றாம் தலைமுறை ஸ்விப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் கிடைக்கிறது. அதுபோலவே ஷோரூமுக்கு முந்தைய அடிப்படை விலை 4.99 லட்சம் முதல் 8.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சூசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெனிச்சி அயூகவா கூறியதாவது,"வாடிக்கையாளர்களின் விருப்பமும், தேர்வும் மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றவகையில் கார்களின் வடிவமைப்பை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஸ்விப்ட் கார் 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 18 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தது. முதன்முறையாக ஸ்விப்ட் தானியங்கி கியர் மாற்றமும், பிரசித்தி பெற்ற இரு பெடல் தொழில்நுட்பத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய காரில் உள் இருக்கை அமைப்பும் சற்று மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்புகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 40 எம்எம் அகலமும், 20 எம்எம் நீளத்தடனும் சக்கரம் உருவாககப்பட்டுள்ளது. அதுபோவே அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளது. இரட்டை ஏர்பேக் வசதி, ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
அதுபோலவே பொருட்களை வைக்கும் வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட இது 28 சதவீதம் அதிகமாகும். குஜராத் மாநில மாருதி ஆலையில் இருந்து இந்த புதிய ஸ்விப்ட் தயாரிக்கப்படுகிறது. மாதத்திற்கு 15000 கார்கள் என்ற எண்ணிக்கையில் இவை தயாரிக்கப்படும்'' எனக்கூறினார்.