Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » இந்தியர்கள் ஏமாற்றப்பட்டார்களா? 3ஜி கொடுத்து 4ஜி பணம் பெற்றுள்ளன நிறுவனங்கள்

இந்தியர்கள் ஏமாற்றப்பட்டார்களா? 3ஜி கொடுத்து 4ஜி பணம் பெற்றுள்ளன நிறுவனங்கள்

இந்தியாவில் 4 ஜி இணையதள வேகத்தை இந்திய நிறுவனங்கள் தருவதில்லை என்றும் 4ஜி இணையவேகம் என்பது மற்ற நாடுகளை விட மிகவும் மெதுவாகவே உள்ளது என இணைய தள பகுப்பாய்வு நிறுவனம் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

👤 Saravana Rajendran23 Feb 2018 3:41 PM GMT
இந்தியர்கள் ஏமாற்றப்பட்டார்களா? 3ஜி  கொடுத்து 4ஜி பணம் பெற்றுள்ளன நிறுவனங்கள்
Share Post

டிஜிட்டல் உலகத்தை நேக்கி இந்தியா பயணம் செய்துகொண்டிருக்கிறது. 2016-க்கு பிறகு 4ஜி இணைய இணைப்பு வந்தபிறகும் கூட, அதிவேக இணைய இணைப்பு, இங்குள்ள நம் மக்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. 4ஜி சேவைகளின் பெரும் எண்ணிக்கையிலான அறிவிப்புகளை அறிவித்திருந்த போதிலும்,எந்த ஒரு நிறுவனமும் 4 ஜி சேவைகளை தந்தது போல் இல்லை என்று கூறியுள்ளது.
இந்தியாவின் சராசரி 4ஜி வேகம் 6mbps என்றும், ஆனால், இதைவிட குறைவான வேகத்திலேயே இந்தியாவின் 4ஜி வேகம் இருக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு முன்னதாக 9mbps 4ஜி வேகத்துடன் அல்ஜீரியா இருக்கிறது. நம் அண்டைய நாடான, பாகிஸ்தானின் 4ஜி வேகம் 14mbps. இது, இந்தியாவை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.
சிங்கப்பூரின் 4ஜி நெட்வொர்க் வேகம்தான் (44mbps) மிக அதிகமாக இருக்கிறது. 42mbps வேகத்துடன், நெதர்லாண்ட் இரண்டாவது இடத்திலும், 41mbps வேகத்துடன், நார்வே மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. மேலும், தென்கொரியா (40mbps) மற்றும் ஹங்கேரி (39mbps) போன்ற நாடுகள், நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பல தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், நஷ்டத்தை நோக்கி செல்கிறது என்றும், ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதால், பல நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
86 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள பயணீட்டாளர்களுக்கு 4ஜி சேவை கிடைத்தபோதிலும், 4ஜி நெட்வொர்க்குகள் 3ஜி விட அதிகமான வேகத்தை வழங்குவதற்கான திறன் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் உள்ள இணைய நிறுவனங்கள் 3 ஜி இணைய இணைப்பை கொடுத்துவிட்டு மக்களிடம் 4ஜிக்கான கட்டணத்தை வாங்கியுள்ளார்கள் என்று இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது, இந்தியாவில் தான் அதிக அளவும் இணையசேவை வழங்கும் பெரிய மையங்கள் செயல்பட்டு வருகிறது, மேலும் இந்தியா தனக்கான சொந்தமாக இணைய இணைப்பு வழங்கும் செயற்கைகோளையும் விண்ணில் ஏவியுள்ளது. இவ்வளவு இருந்தும் இந்தியர்களுக்கு இணைய இணைப்பின் வேகம் வரவில்லை என்றால் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன என்பதே பொருளாகும்