Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » பருவநிலை மாற்றத்தினால் ஆந்திராவில் கடற்கரையோரப் பகுதியில் 36749-முறை மின்னல் வெட்டியுள்ளது.

பருவநிலை மாற்றத்தினால் ஆந்திராவில் கடற்கரையோரப் பகுதியில் 36749-முறை மின்னல் வெட்டியுள்ளது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 24.4.18(செவ்வாய்) அன்று 13 மணி நேரத்துக்குள்ளாக 36,749 முறை மின்னல் தாக்கியதாக பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்திவரும் அதிகாரிகள் கூறினர்.

👤 Saravana Rajendran27 April 2018 3:34 PM GMT
பருவநிலை மாற்றத்தினால் ஆந்திராவில் கடற்கரையோரப் பகுதியில் 36749-முறை மின்னல் வெட்டியுள்ளது.
Share Post

இவ்வளவு மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டுவதென்பது வழக்கத்தை விட மிகவும் அதிகம்.
இத்தொடர் மின்னல்வெட்டின் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்தனர். இவர்களில் 9 வயதுச் சிறுமியும் அடங்குவார்.
கடுமையான பருவமழைக் காலங்களில் மின்னல் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. ஆனால் தற்போது கடற்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அதன் மேற்பகுதியின் வெப்பச்சுழறிச்சி ஏற்பட்டு கரையோரப்பகுதிகளில் இத்தகைய மின்னல் வெட்டுக்கள் உருவாகியது. இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குக் கரையோரம் பருவமழைக் காலத்துக்கு முன்னதாகவே அதிக அளவில் மின்னல் தாக்கத் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் இதே பகுதிகளில் சுமார் 30,000 முறை மின்னல் தாக்கியது. இதனால், செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் அதைவிட அதிகமான முறை மின்னல் தாக்கியது, வழக்கத்திற்கு மாறானதாகக் கருதப்படுகிறது.