Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

அந்த பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

👤 Sivasankaran13 Jan 2021 12:23 PM GMT
70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
Share Post

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கட்டிட வன்முறை தொடர்பாக சமூகவலைதளமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள், காணொலிகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

அந்த பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பாராளுமன்ற கட்டிட வன்முறை தொடர்பான கருத்துக்களை பதிவிட்டதாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் கருத்துக்கள், காணொலிகளை டுவிட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.