Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » கோள்களில் கடைவிரிக்க தயாரகுங்கள். தனியார் மயமாகும் விண்வெளி பயணங்கள்

கோள்களில் கடைவிரிக்க தயாரகுங்கள். தனியார் மயமாகும் விண்வெளி பயணங்கள்

நியூயார்க்: உலகில் பெரிய நாடுகள் எல்லாம் விண்வெளி துறையில் முக்கியமான பங்காற்றி வருகிறது. அதே...

👤 Saravana Rajendran7 Feb 2018 1:24 AM GMT
கோள்களில் கடைவிரிக்க தயாரகுங்கள். தனியார் மயமாகும் விண்வெளி பயணங்கள்
Share Post

நியூயார்க்: உலகில் பெரிய நாடுகள் எல்லாம் விண்வெளி துறையில் முக்கியமான பங்காற்றி வருகிறது. அதே நேரத்தில் விண்வெளி அய்வில் சில தனியார் நிறுவனங்களும் ஆய்வு செய்துவருகின்றன. இதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வில் தனியார் பங்கு தொடர்பில் பில் கிளிண்டல் ஆட்சிகாலத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, ஒபாமாவின் ஆட்சியின் போது அது மேலும் எளிமையாக்கப்பட்டது. இதனை அடுத்து தனியார் நிறுவனங்கள் சந்திரை ஆய்வு செய்யவும், பரந்த இப்பெருவெளியில் தங்கள் பயணத்தை துவக்கவும் ஆயத்தமாகியுள்ளனர்.
அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் புதியமைல்கல்லை எட்டியுள்ளது.. அமெரிக்காவின் மிகபெரிய கோடிஸ்வரர்களில் ஒருவரான ஏலன் மாஸ்க் துவக்கிய நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஆகும்
இந்நிறுவனம் தற்போது உலகிலேயே பெரிய ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டிற்கு பால்கான் எவி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 20 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் இதில் இருக்கிறது.
இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கோளுக்கு அனுப்ப முடியும், மேலும் 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும், 16 மெட்ரிக் டன் எடையை செவ்வாய் கிரகத்திலும் நிறுத்த முடியும். நாசா 1970களில் கைவிட்ட சட்ரன் வி ராக்கெட்டை விட பல மடங்கு பெரிது.
தற்போது இந்த ராக்கெட் சோதனைக்காக மட்டுமே அனுப்பப் படுகிறது, முக்கியமாக எவ்வளவு எடையைத் தாங்கிச்செல்லும் என்று பார்ப்பதே இதன் முக்கியமான நோக்கமாமும்.
அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நன்பகல் 3.45 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. இது தொடர்பாக நிறுவனத்தலைவர் ஏலன் மாஸ்க் கூறியதாவது, ராக்கெட் ஏவப்படும் சில வினாடிகளில் சில பிரச்சினைகள் இருந்தன. இறுதியில் எங்கள் அனைவரது ஒத்துழைப்பில் உருவாகிய ராக்கேட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது என்றார்.
எதிர்காலத்தில் நிலவில் ஹீலியம் 3 என்ற எரிபொருளை எடுப்பதற்காகவும், இதர கோள்களில் இருந்து எரிவாயுவை பூமிக்கு கொண்டுவரும் நோக்குடன் இந்த ராக்கேட் அனுப்ப திட்டம் இருக்கிறது. இதன் வெற்றியைப் பொறுத்து இனி நாமும் நிலவிலும் இதர கோள்களிலும் கடையை விரிக்கலாம்.