Home » விளையாட்டு » இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

விகாஸ் ககாட்கர் சந்திப்புக்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran28 Feb 2021 5:00 AM GMT
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
Share Post

புனேயில் 3 ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்திப்புக்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தற்போதைய தீவிரத்தை கவனத்தில் கொண்டு, முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு பிறகு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.