Home » விளையாட்டு » உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜெர்மனி தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜெர்மனி தகுதி

தகுதி சுற்றில் மொத்தம் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

👤 Sivasankaran13 Oct 2021 5:04 PM GMT
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜெர்மனி தகுதி
Share Post

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது.

ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் மொத்தம் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இதில் 'ஜெ' பிரிவில் 6 அணிகளில் ஒன்றாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான வடக்கு மாசிடோனியாவை வென்றது.

ஜெர்மனி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 21 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜெர்மனி, முதல் அணியாக 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.