
விம்பிள்டன் தடையைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை நடேலா டிசலமிட்ஸே தனது குடியுரிமையை மாற்றியுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக நடேலா டிசலமிட்ஸே தனது ரஷ்ய குடியுரிமையை ஜார்ஜிய நாட்டிற்கு மாற்றினார்.
உலக தரவரிசையில் 43வது இடத்தில் உள்ள ரஷ்ய இரட்டையர் ஆட்டக்காரர், இப்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இணையதளத்தில் ஜார்ஜிய நாட்டவர் என அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளார்.
அவர் குடியுரிமை மாற்றத்துடன், அவர் தனது இரட்டையர் கூட்டாளியான செர்பியாவின் அலெக்ஸாண்ட்ரா க்ருனிக்குடன் போட்டியிட தகுதி பெற்றார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக இந்த ஆண்டு விம்பிள்டன் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.