Home » விளையாட்டு » இந்தியாவுக்கு தங்கத்தை வென்று கொடுத்தார் தீபக் புனியா

இந்தியாவுக்கு தங்கத்தை வென்று கொடுத்தார் தீபக் புனியா

65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

👤 Sivasankaran6 Aug 2022 2:19 PM GMT
இந்தியாவுக்கு தங்கத்தை வென்று கொடுத்தார் தீபக் புனியா
Share Post

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார். இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.