Home » விளையாட்டு » அரசாங்கத்தை விமர்சித்ததற்காக ஈரான் கால்பந்து வீரர் கைது

அரசாங்கத்தை விமர்சித்ததற்காக ஈரான் கால்பந்து வீரர் கைது

தேசிய கால்பந்து அணியை அவமதித்ததற்காகவும், அரசாங்கத்தை விமர்சித்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாக அரை-அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் மற்றும் தஸ்னிம் செய்தி நிறுவனங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

👤 Sivasankaran25 Nov 2022 8:55 AM GMT
அரசாங்கத்தை விமர்சித்ததற்காக ஈரான் கால்பந்து வீரர் கைது
Share Post

ஈரானின் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் உறுப்பினரான வோரியா கஃபௌரி, அரசாங்கத்தை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சார்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பிபா உலகக் கோப்பையில் விளையாடி வரும் தேசிய கால்பந்து அணியை அவமதித்ததற்காகவும், அரசாங்கத்தை விமர்சித்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாக அரை-அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் மற்றும் தஸ்னிம் செய்தி நிறுவனங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

உலகக் கோப்பைக்கு செல்ல தேர்வு செய்யப்படாத கஃபூரி, ஈரானிய அதிகாரிகள் மற்றும் கொள்கைகளை தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படையாக விமர்சித்தவர் ஆவார்.