Home » விளையாட்டு » எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை: தசுன் ஷனக

எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை: தசுன் ஷனக

ஷனகா ஒரு ட்விட்டர் செய்தியில், ஒரு அரசியல் கட்சி பிரச்சாரத்தில் தனது படம் பரப்பப்படுவதை கவனித்ததாக கூறினார்.

👤 Sivasankaran30 Jan 2023 11:56 PM GMT
எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை: தசுன் ஷனக
Share Post

சிறிலங்கா அணித்தலைவர் தசுன் ஷனக, தனக்கு நாட்டில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

ஷனகா ஒரு ட்விட்டர் செய்தியில், ஒரு அரசியல் கட்சி பிரச்சாரத்தில் தனது படம் பரப்பப்படுவதை கவனித்ததாக கூறினார்.

"ஒரு அரசியல் கட்சி பிரச்சாரத்தில் எனது படம் பரவுவதை நான் கவனித்தேன். எனக்கு எந்தக் கட்சியுடனும் விருப்பமில்லை அல்லது தூதராகப் பங்கேற்றதுமில்லை. எனது உண்மையான அன்பும் ஆர்வமும் எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதுதான்" என்று ட்வீட் செய்துள்ளார்.