இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும்: வாசிம் ஜாஃபர்
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மேம்பட்ட ஆட்டத்துடன் மீண்டு வரும் என எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜா ரெட்டி மைதானத்தில் மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஈஎஸ்பிஎன் க்ரிக் இன்ஃபோவுடன் பேசிய ஜாஃபர், தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார். மும்பையில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்தியா 10.1 ஓவர்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
"ஒரு நாள் கிரிக்கெட்டில் டாப்-ஆர்டர் பேட்டர்களிடமிருந்து ஒரு அணிக்கு ரன்கள் தேவை என்பதில் சந்தேகமில்லை, மேலும் அவர்கள் இரண்டாவது ஆட்டத்தில் மேம்பட்ட செயல்திறனை வழங்குவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்" என்று ஜாஃபர் கூறினார்.