Home » விளையாட்டு » 2032ல் ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும்

2032ல் ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும்

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து, இந்தோனேசியா, ஹங்கேரி,...

👤 Sivasankaran22 July 2021 3:29 PM GMT
2032ல் ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும்
Share Post

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து, இந்தோனேசியா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, சீனா, கத்தார், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன.

இவற்றை பரிசீலனை செய்த பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை தேர்வு செய்தது. இதற்கு ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகக் குழு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

2032ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவது தொடர்பாக இன்று டோக்கியோவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரிஸ்பேனில் போட்டியை நடத்த 72 பேர் 'ஆம்' என்று வாக்களித்தனர். 5 பேர் மட்டும் 'இல்லை' என்று வாக்களித்தனர். இதையடுத்து, 2032ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பிரிஸ்பேன் நகரம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.