சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு மிகவும் மோசமடைந்துள்ளதாக கனடாவிற்கான சீன உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் முதல் முறையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலைமை கவலையளிப்பதாகவும் கூறினார்.
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் தலைமை நிதி நிர்வாக அதிகாரி கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.