ரஷியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்
ரஷியாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை எரிவாயு கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.
👤 Sivasankaran3 Jan 2019 10:03 AM GMT

ரஷியாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை எரிவாயு கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 48 வீடுகள் இடிந்து விழுந்தன.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு உடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இரு நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
நேற்று மாலை வரை 37 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire