Home » உலகச் செய்திகள் » பிரெக்சிட் - தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரெக்சிட் - தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு ...

👤 Sivasankaran17 Jan 2019 6:40 PM GMT
பிரெக்சிட்  - தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
Share Post

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்நது.

தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்ததால் தெரசா மே அரசு தப்பியது.