Home » உலகச் செய்திகள் » டிரம்ப் ராஜினாமா - வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி உண்மையா?

டிரம்ப் ராஜினாமா - வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி உண்மையா?

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள மக்கள் புதன்கிழமை காலை ஒரு பெரிய ஆச்சரியத்தில் மூழ்கினர்....

👤 Sivasankaran19 Jan 2019 12:14 PM GMT
டிரம்ப் ராஜினாமா - வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி உண்மையா?
Share Post

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள மக்கள் புதன்கிழமை காலை ஒரு பெரிய ஆச்சரியத்தில் மூழ்கினர். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதல் பக்கத்தில் 6 கால செய்தியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகியுள்ளார், என்று செய்தி இடம்பெற்று இருந்தது.

அதன் தலைப்பில் "எதிர்பாராதது: டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார்" நெருக்கடி முடிவுக்கு வந்தது என செய்தி வந்து இருந்தது.

அதில் டிரப்பின் 4 கால படம் அவரது தலை தொங்கி சோகத்தில் இருப்பது போல் இருந்தது.

பத்திரிகையின் இடது பக்கத்தில், நீண்ட ஒற்றை காலத்தில் அறிக்கை இருந்தது. அதன் தலைப்பில் டிரம்ப் சகாப்தம் முடிவடைகிறது என உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. செய்தித்தாள் மே 1, 2019 என தேதியிடப்பட்டு இருந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வாஷிங்டன் டிசி இன் நாளிதழ் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள பகுதிகள் உட்பட இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

தி வாஷிங்டன் போஸ்ட் அது ஒரு போலி பதிப்பு என்று தெளிவுபடுத்தியதுடன் செய்தித்தாள் எதுவும் நாங்கள் வெளியிடவில்லை என கூறி உள்ளது.