Home » உலகச் செய்திகள் » ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை - பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்

ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை - பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்

ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அறிவிப்பை...

👤 Sivasankaran22 Jan 2019 5:27 PM GMT
ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை  - பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்
Share Post

ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அறிவிப்பை அதிபர் எம்மர்சன் மனங்காக்வா அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஹராரே, தென்மேற்கு நகரமான புலவாயோ போன்ற இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறைபோராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். இந்த வன்முறைப் போராட்டம் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றிருந்த அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, மாநாட்டில் பங்கேற்காமல் நேற்று இரவே நாடு திரும்பினார்.