Home » உலகச் செய்திகள் » ஹுவாவி அதிகாரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் - கனடா பிரதமர்

ஹுவாவி அதிகாரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் - கனடா பிரதமர்

கனடிய சட்டத்தின் கீழ் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அமெரிக்காவிற்கு நாடு...

👤 Sivasankaran24 Jan 2019 5:40 PM GMT
ஹுவாவி அதிகாரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் - கனடா பிரதமர்
Share Post

கனடிய சட்டத்தின் கீழ் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஹுவாவி அதிகாரியின் நாடுகடத்தல் தொடர்பான அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று (புதன்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த பிரதமர் ட்ரூடோ, "கனடா ஒரு சட்ட விதிமுறைகளின் கீழ் செயற்படும் நாடு என்பதை நாம் தொடர்ந்து எப்போதும் முன்னிலைப்படுத்தி வருகின்றோம். அதன்படி, சட்டத்தின் ஆட்சி ஒழுங்காகவும், முழுமையாகவும் பின்பற்றப்படும் என்பதை நாம் உறுதிசெய்வோம்.

இதற்கமைய தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பை கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள ஹுவாவி அதிகாரி பெற்றுள்ளார். இது எமது நீதித்துறையின் ஒரு அங்கமாகும்.

இதேவேளை, சீனாவில் ஒருதலைப்பட்சமாக கைது செய்யப்பட்டுள்ள கனேடியர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நாம் தீவிரமாக முயற்சிப்போம்" எனத் தெரிவித்தார்.