Home » உலகச் செய்திகள் » வவுனியாவில் மக்கள் பெருமளவில் கலந்துக் கொள்ள வேண்டும் - விக்னேஸ்வரன்

வவுனியாவில் மக்கள் பெருமளவில் கலந்துக் கொள்ள வேண்டும் - விக்னேஸ்வரன்

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் நாளை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்துக் கொள்ள அழைப்பி விடுத்துள்ளார் விக்னேஸ்வரன்.

👤 Sivasankaran29 Jan 2019 6:14 PM GMT
வவுனியாவில் மக்கள் பெருமளவில் கலந்துக் கொள்ள வேண்டும் - விக்னேஸ்வரன்
Share Post

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் நாளை ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற இருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இந்த போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் விக்னேஸ்வரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.