Home » உலகச் செய்திகள் » மனோ கணேசன் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் - கெஹலிய

மனோ கணேசன் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் - கெஹலிய

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்திலிருந்து அமைச்சர் மனோ கணேசன் உடனடியாக விலகவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran30 Jan 2019 5:44 PM GMT
மனோ கணேசன் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் - கெஹலிய
Share Post

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்திலிருந்து அமைச்சர் மனோ கணேசன் உடனடியாக விலகவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கமும் மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே இவ்விடயத்தில் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு அதனை நிறைவேற்றத் தவறியதால் இந்த அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி விலக வேண்டும்.

கூட்டு ஒப்பந்தம் கைசாத்திட்டதற்கு அமைச்சர் மனோ கணேசன் தனது விசனத்தை வெளியிட்டிருந்ததோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்திருந்தார்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட அரசாங்கத்திலும் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியே அதற்கான சந்தர்ப்பத்தையும் இல்லாமல் செய்தது. ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை" என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.