Home » உலகச் செய்திகள் » பாடசாலை பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் - போக்குவரத்து அமைச்சர்

பாடசாலை பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் - போக்குவரத்து அமைச்சர்

கனடா, அல்பேர்ட்டா மாகாணத்தில் இயங்கும் பாடசாலை பேருந்துகளில் ஆசனப்பட்டி தற்போது கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran30 Jan 2019 5:46 PM GMT
பாடசாலை பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் - போக்குவரத்து அமைச்சர்
Share Post

கனடா, அல்பேர்ட்டா மாகாணத்தில் இயங்கும் பாடசாலை பேருந்துகளில் ஆசனப்பட்டி தற்போது கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்கரிக்கு தெற்கே ஒரு பாடசாலை பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் படுகாயமடைந்தனர். அந்த பேருந்தின் சாரதியும், மாணவர்கள் சிலரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரையன் மேசன், மாகாணத்தில் இயங்கும் பாடசாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டியைக் கட்டாயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.