Home » உலகச் செய்திகள் » மம்தாவுக்கு எதிரான சி.பி.ஐ., மனு - கோர்ட்டில் நாளை விசாரணை

மம்தாவுக்கு எதிரான சி.பி.ஐ., மனு - கோர்ட்டில் நாளை விசாரணை

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

👤 Sivasankaran4 Feb 2019 6:22 PM GMT
மம்தாவுக்கு எதிரான சி.பி.ஐ., மனு - கோர்ட்டில் நாளை விசாரணை
Share Post

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாநில அரசு ஒத்துழைக்காததை கண்டித்து சிபிஐ, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

நேற்று மாலை கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் சென்றனர். இந்நேரத்தில் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் மாநில முதல்வர் மம்தா, கமிஷனர் வீட்டிற்கு சென்றார். சில சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசார் பிடித்து வைத்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில்: சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி விசாரணை நடந்து வருகிறது. மேலும் மாநில போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் மாநில அரசும், போலீசாரும் ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர். இது கோர்ட் அவமதிப்பாகும். சி.பி.ஐ., க்கு அரசும், போலீசும் ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும், மேலும் கமிஷனர் ராஜீவ்குமாரை சிபிஐ முன்பு ஆஜராக உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி முன்னிலையில் நடக்க உள்ளது.