கனடியப் பேராசிரியர் கொலைச் சம்பவம் - ஒருவர் கைது
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர் பணியாற்றி வந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல் போயிருந்தார்.
பின்னர் டிசம்பர் 24 ஆம் திகதி அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணத்துக்கு காரணம் குடிபானத்தில் விஷம் கலக்கப்பட்டிருந்தமையே என வன்கூவரில் உள்ள அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டியில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபனோ மரோன் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.