Home » உலகச் செய்திகள் » நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு - அச்சத்தில் மக்கள்

நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு - அச்சத்தில் மக்கள்

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

👤 Sivasankaran4 Feb 2019 7:16 PM GMT
நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு - அச்சத்தில் மக்கள்
Share Post

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின் போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகளை வெளியிட்டு, தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் படியும், இதுபோன்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.