Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் பிற்போடப்படமாட்டாது - கிறிஸ் கிரேலிங்

பிரெக்ஸிற் பிற்போடப்படமாட்டாது - கிறிஸ் கிரேலிங்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான நடைமுறை தாமதப்படுத்தப்பட மாட்டாது என டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் போக்குவரத்து அமைச்சர் கிறிஸ் கிரேலிங் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran5 Feb 2019 4:19 PM GMT
பிரெக்ஸிற் பிற்போடப்படமாட்டாது - கிறிஸ் கிரேலிங்
Share Post

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான நடைமுறை தாமதப்படுத்தப்பட மாட்டாது என டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் போக்குவரத்து அமைச்சர் கிறிஸ் கிரேலிங் தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சரவை கூட்டங்களிலும் தாம் கலந்துக் கொண்டதாகவும் அவை எதிலும் பிரெக்சிற்றை தாமதப்படுத்தப்படுவதை பற்றி எந்த உரையாடலும் இடம் பெறவில்லையெனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு உடன்படிக்கை எதுவுமில்லாமல் பிரித்தானியா வெளியேறினால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

பிரெக்ஸிற்றுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவான நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் பிரெக்ஸிற் தாமதப்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.