Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் - டொனால்ட் ரஸ்க்

பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் - டொனால்ட் ரஸ்க்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு எவ்வாறு பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற எவ்விதமான திட்டங்களுமில்லாமல்...

👤 Sivasankaran6 Feb 2019 4:46 PM GMT
பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் - டொனால்ட் ரஸ்க்
Share Post

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு எவ்வாறு பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற எவ்விதமான திட்டங்களுமில்லாமல் பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமென ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸ்க்கு விஜயம் செய்துள்ள ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே டொனால்ட் ரஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளை பிரஸ்ஸல்ஸ் பயணிக்கவுள்ள பிரதமர் தெரேசா மே-யிடமிருந்து இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்கான யதார்த்தமான ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் பொதுவான தீர்வொன்று சாத்தியம் என்பதை தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும் டொனால்ட் ரஸ்க் தெரிவித்தார்.