டிரம்ப் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது - மருத்துவர் தகவல்
அமெரிக்க அதிபருக்கு ஆண்டு தோறும் உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய அதிபர்...
👤 Sivasankaran9 Feb 2019 4:44 PM GMT

அமெரிக்க அதிபருக்கு ஆண்டு தோறும் உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபரானது முதல் அவருக்கு வருடாந்திர உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதிபராக பொறுப்பேற்ற டிரம்பிற்கு நேற்று 2-வது முறையாக உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் பரிசோதனையை வெள்ளை மாளிகையில் அதிபருக்கான மருத்துவர் சீன் பி கோன்லே தலைமையிலான மருத்துவக்குழு மேற்கொண்டது.
4 மணி நேரம் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இந்தக்குழு வெளியிட்ட அறிக்கையில், டிரம்பின் உடல் நலம் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 72 வயதான டிரம்பிற்கு புகை பழக்கம் உள்பட எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று சொல்லப்படுகிறது. வெள்ளை மாளிகை வளாகத்தில் தினந்தோறும் நீண்ட தூரம் நடப்பதை டிரம்ப் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire