Home » உலகச் செய்திகள் » யுனைடெட் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் - சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

யுனைடெட் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் - சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

கனடாவின் யுனைடெட் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின்...

👤 Sivasankaran11 Feb 2019 5:12 PM GMT
யுனைடெட் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் - சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
Share Post

கனடாவின் யுனைடெட் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்னஞ்சல் ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யுனைடெட் கன்ர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 18 வயதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அப்துல் அனாஸ் ஹபாஸ் என்ற பெயருடைய 18 வயதான நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.