Home » உலகச் செய்திகள் » இந்தியா தாக்கினால் பதிலடி - இம்ரான் கான்

இந்தியா தாக்கினால் பதிலடி - இம்ரான் கான்

இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுப்போம்.

👤 Sivasankaran19 Feb 2019 4:13 PM GMT
இந்தியா தாக்கினால் பதிலடி - இம்ரான் கான்
Share Post

எந்த ஆதாரமும் இல்லாமல், பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது. வன்முறைக்காக எங்கள் மண்ணை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது எங்களது கொள்கை. காஷ்மீர் தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஆதாரம் வழங்கினால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.

நாங்களும் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளோம். காஷ்மீர் பிரச்னைக்கு பாகிஸ்தான் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என விரும்புகிறோம். இது போன்ற தாக்குதல் சம்பவங்களால், பாகிஸ்தான் எப்படி பயன்பெறும்.

இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுப்போம். போரை துவக்குவது மனிதர்கள் தான் என அனைவரும் அறிந்தாலும், இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை கடவுள் தான் அறிவார். போரை ஆரம்பிப்பது எளிது. ஆனால், முடிவுக்கு கொண்டு வருவது கடினம். பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டும். என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.