Home » உலகச் செய்திகள் » உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பாதகமானது - ஹம்மண்ட்

உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பாதகமானது - ஹம்மண்ட்

பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதே சிறந்தது என பிரித்தானியாவின் மிகப் பெரிய உற்பத்தியாளர் சங்கத்தின் வருடாந்த விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதியமைச்சர் வலியுறுத்தினார்.

👤 Sivasankaran20 Feb 2019 5:24 PM GMT
உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பாதகமானது - ஹம்மண்ட்
Share Post

பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கு கடுமையான வீழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்பினருக்குமே பாதகமானது என நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் எச்சரித்துள்ளார்.

ஐரிஷ் எல்லை தொடர்பான கொள்கையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவிடவேண்டும் ஏனெனில் குறுகியகால அறிவிப்பினால் அவை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதே சிறந்தது என பிரித்தானியாவின் மிகப் பெரிய உற்பத்தியாளர் சங்கத்தின் வருடாந்த விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதியமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், இருபக்கமும் பெரும் தாக்கத்தினைத் தரக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அனைவரும் முன்னெடுக்கவேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.