Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை - ஜுங்கர்

பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை - ஜுங்கர்

ஒவ்வொரு தடவையும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பிரெக்ஸிற் தொடர்பான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு எண்ணங்களை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

👤 Sivasankaran21 Feb 2019 5:26 PM GMT
பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை - ஜுங்கர்
Share Post

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் ஒன்றுடன் பிரித்தானியா வெளியேறும் என்பதில் தனக்கு பெரியளவில் நம்பிக்கையில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் அது இருதரப்பினருக்கும் பொருளாதாரரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்கவேண்டும் என்பதே தமது விருப்பமெனவும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துவருவதாகவும் ஆனாலும் ஒப்பந்தமொன்று எட்டப்படுமென்பதில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் ஜுங்கர் தெரிவித்தார்.

ஏனெனில் ஒவ்வொரு தடவையும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பிரெக்ஸிற் தொடர்பான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு எண்ணங்களை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஜீன்-க்ளூட் ஜுங்கர் இடையே பிரெக்ஸிற் தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே ஜுங்கர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.