Home » உலகச் செய்திகள் » இலங்கை - பாகிஸ்தான் விமானசேவை ரத்து

இலங்கை - பாகிஸ்தான் விமானசேவை ரத்து

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்றுவரும் போர்ச் சூழல் காரணமாக பாகிஸ்தான் இந்நடவடிக்கை​யை எடுத்துள்ளது.

👤 Sivasankaran1 March 2019 4:20 PM GMT
இலங்கை - பாகிஸ்தான் விமானசேவை ரத்து
Share Post

பாகிஸ்தான் - இலங்கை இடையிலான விமான சேவை வரும் 4ம் திகதி திங்கட்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்ற அனைத்து பாகிஸ்தானின் வான் மார்கங்களிலும் வரும் மார்ச் 4ஆம் திகதி வரை விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்றுவரும் போர்ச் சூழல் காரணமாக பாகிஸ்தான் இந்நடவடிக்கை​யை எடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.