Home » உலகச் செய்திகள் » விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் - அதிர்ச்சியில் பயணி

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் - அதிர்ச்சியில் பயணி

இதனால் கடும் அதிர்ச்சியடைந்து, பின்னர் விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

👤 Sivasankaran2 March 2019 2:05 PM GMT
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் - அதிர்ச்சியில் பயணி
Share Post

சிங்கப்பூர் ஏர்லைன்சின் பயணிகள் விமானத்தில் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பிராட்லி பெத்தான் என்பவர் பயணம் செய்தார்.

விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அவர் சாப்பிட தொடங்கிய போது, கல்போன்று ஏதோ பொருள் வாயில் கடிப்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அது மனித பல் என தெரிந்துக் கொண்டார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்து, பின்னர் விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

தங்களது தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியடன், இழப்பீடாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 75 அமெரிக்க டாலர் மதிப்பிலான இலவச கூப்பனையும் வழங்கியது.