Home » உலகச் செய்திகள் » கச்சதீவு திருவிழா - படகுகளுக்கு தமிழக அரசின் அனுமதி

கச்சதீவு திருவிழா - படகுகளுக்கு தமிழக அரசின் அனுமதி

திருவிழாவை முன்னிட்டு மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran3 March 2019 5:50 PM GMT
கச்சதீவு திருவிழா - படகுகளுக்கு தமிழக அரசின் அனுமதி
Share Post

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டுப் படகுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தீர்மானம் எடுத்துள்ளது. மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவிழாவை முன்னிட்டு மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திலேயே எத்தனை படகுகளை விடுவிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவுகள் தெவிரிக்கப்படுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.