Home » உலகச் செய்திகள் » நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை - இம்ரான்கான்

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை - இம்ரான்கான்

சர்வதேச நாடுகளும் அபிநந்தனின் விடுதலைக்காக பெருமளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது.

👤 Sivasankaran4 March 2019 3:42 PM GMT
நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை - இம்ரான்கான்
Share Post

இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். அவர் தெரிவித்திருந்தபடி, அபிநந்தன் முறைப்படி இந்தியாவில் ஒப்படைக்கப்பட்டார்.

சர்வதேச நாடுகளும் அபிநந்தனின் விடுதலைக்காக பெருமளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது.

இம்ரான்கான் சொல்லியபடியே, விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டதால், இம்ரான்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளில் இருந்து இம்ரான்கானின் நடவடிக்கையை மக்கள் டுவிட்டரில் பாராட்டினர்.

இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் "நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி மற்றும் துணை கண்டத்தில் வளர்ச்சி யார் ஏற்படுத்துகிறாரோ அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்" என்று பதிவிட்டுள்ளார்.