Home » உலகச் செய்திகள் » நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க ஒத்துழைப்பேன் - சந்திரிகா குமாரதுங்க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க ஒத்துழைப்பேன் - சந்திரிகா குமாரதுங்க

வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பது.

👤 Sivasankaran7 March 2019 1:06 PM GMT
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க ஒத்துழைப்பேன் - சந்திரிகா குமாரதுங்க
Share Post

கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால், தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முதலில் யோசனை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறினார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க கூறினார்.