Home » உலகச் செய்திகள் » புகையிரதங்களில் பெண்களுக்கு தனியான பயணபெட்டிகள் - அர்ஜூன ரனதுங்க

புகையிரதங்களில் பெண்களுக்கு தனியான பயணபெட்டிகள் - அர்ஜூன ரனதுங்க

அலுவலக புகையிரதங்களில் மகளிர்களுக்கான புகையிரத பெட்டிகள் இணைக்கப்படுவதுடன் மகளிர்களுக்கு எதிர்காலத்தில் ஏனைய புகையிரத சேவைகளிலும் இவ்வாறான பயண வசதிகள் செய்யப்படும்

👤 Sivasankaran7 March 2019 5:43 PM GMT
புகையிரதங்களில் பெண்களுக்கு தனியான பயணபெட்டிகள் - அர்ஜூன ரனதுங்க
Share Post

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை முதல் அலுவலக ஏழு புகையிரதங்களில் பெண்களுக்காக புகையிரத பயண பெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளில் அடிக்கடி நடைபெறும் சிரமங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன் முதல் கட்டத்தின் கீழ் அலுவலக புகையிரதங்களில் மகளிர்களுக்கான புகையிரத பெட்டிகள் இணைக்கப்படுவதுடன் மகளிர்களுக்கு எதிர்காலத்தில் ஏனைய புகையிரத சேவைகளிலும் இவ்வாறான பயண வசதிகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.