Home » உலகச் செய்திகள் » இஸ்ரேல் வீரர்களின் தாக்குதல் - பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழப்பு

இஸ்ரேல் வீரர்களின் தாக்குதல் - பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழப்பு

6 ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

👤 Sivasankaran7 March 2019 5:48 PM GMT
இஸ்ரேல் வீரர்களின் தாக்குதல் - பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழப்பு
Share Post

ஆர்ப்பாட்டத்தின் போது 15 வயதான பாலஸ்தீனிய சிறுவனை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் சுட்டு கொன்றுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடந்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்கள் முற்றுகையிட்டிருந்த சமயத்தில் அபு செய்ட் என அடையாளம் காணப்பட்ட குறித்த சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 6 ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.