Home » உலகச் செய்திகள் » நமது படைகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பாகிஸ்தான் ராணுவ தளபதி

நமது படைகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பாகிஸ்தான் ராணுவ தளபதி

அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது.

👤 Sivasankaran8 March 2019 3:52 PM GMT
நமது படைகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பாகிஸ்தான் ராணுவ தளபதி
Share Post

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தை பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தலைமை தாங்கினார்.

அந்த கூட்டத்தில் பேசுகையில்,

அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது. படைகளை பயன்படுத்தியோ அல்லது படைகளை பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தரும் வகையில், நமது படைகள் எப்போதும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று பேசினார்.