
அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினர் இன்று (வெள்ளிக்கிழமை) 'பொருத்தது போதும்' என்ற பொருளில் கண்டியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, "வரலாற்று காலங்களில் அரசர்கள் அந்நியர்களுக்கு எதிராக போராடியே தாய் நாட்டை பாதுகாத்தார்கள்.
இந்த காலக்கட்டத்தில் மன்னர்கள் எவரும் அந்நியர்களுக்கு விலை போகவில்லை. ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி மேற்குலகத்தவர்களுக்கு முழுமையாக விலைபோயுள்ளனர். எனவே ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்" என்று கூறினார்.