Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் - பிரதமர் தெரேசாவுக்கு ஆதரவு அதிகரிக்குமா?

பிரெக்ஸிற் - பிரதமர் தெரேசாவுக்கு ஆதரவு அதிகரிக்குமா?

பிரெக்ஸிற் வாக்கெடுப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

👤 Sivasankaran12 March 2019 5:50 PM GMT
பிரெக்ஸிற் - பிரதமர் தெரேசாவுக்கு ஆதரவு அதிகரிக்குமா?
Share Post

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற உள்ளதாக பிரதமர் மே தெரிவித்துள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறும் பிரெக்ஸிற் வாக்கெடுப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மே சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக வழங்கிய வாக்குறுதிகளைத் தொடர்ந்து பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் சாதக நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.