விமானத்தில் தீ - சாதுர்யமாக விமானத்தை தரை இறக்கினார் விமானி
விமானத்தில் 209 பயணிகள் இருந்தனர்.
👤 Sivasankaran19 March 2019 5:33 PM GMT

நியுயார்க்கில் இருந்து லண்டன் சென்ற போயிங் 777 ரக விமானத்தில் திடீரென்று தீப்பரவல் ஏற்பட்டது. விமானம் கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்கிழமை) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் 209 பயணிகள் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய, சில மணி நேரங்களில் விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து பயணிகளால் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, குறித்த விமானத்தை கனடாவின், சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கியுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire