Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் - பிற்போடுவதற்கான கோரிக்கையை வைப்பாரா தெரேசா மே?

பிரெக்ஸிற் - பிற்போடுவதற்கான கோரிக்கையை வைப்பாரா தெரேசா மே?

இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற உள்ளது.

👤 Sivasankaran19 March 2019 6:18 PM GMT
பிரெக்ஸிற் - பிற்போடுவதற்கான கோரிக்கையை வைப்பாரா தெரேசா மே?
Share Post

பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே முன்வைப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு பின்னரும் பிரெக்ஸிற் பிற்போடப்படலாமெனவும் நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற உள்ளது.

ஆனாலும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

தமது பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் குறுகியகால தாமதத்தையும் நிராகரித்தால் நீண்டகால தாமதத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவால் முன்வைக்கப்படும் பிரெக்ஸிற்றுக்கான எந்தவொரு கோரிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.