Home » உலகச் செய்திகள் » ஈரானில் வெள்ள அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை உத்தரவு

ஈரானில் வெள்ள அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை உத்தரவு

ஈரானில் புயல் மற்றும் வெள்ள அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில், தென்-மேற்கு குஜெஸ்தான் மாகாணத்தின்...

👤 Sivasankaran2 April 2019 3:58 PM GMT
ஈரானில் வெள்ள அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை உத்தரவு
Share Post

ஈரானில் புயல் மற்றும் வெள்ள அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில், தென்-மேற்கு குஜெஸ்தான் மாகாணத்தின் 70 கிராமங்களை சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளை புயல் தாக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக நீடித்துவரும் மழை வெள்ளத்தினால் சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் 31 மாகாணங்களில் 23 மாகாணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.